Parkavakulam Logo பார்க்கவகுலம்
பார்க்கவகுலம்

பார்க்கவகுலம் – கோவை

வரலாறு • பாரம்பரியம் • ஒற்றுமை

அறிந்து கொள்வோம்

நோக்கம்

பார்க்கவகுலம் (சுருதிமான்-மலையமான்-நத்தமான்) சமுதாய மக்களின் முன்னேற்றத்தை உருவாக்குவதும் சமுதாய மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதும் சமுதாய பிரச்சனைகளை சரிசெய்வதும் சமுதாயமக்களை பாதுகாக்கவும் சமுதாய மக்களிடத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வளர்ப்பதையே நோக்கமாக்கி செயல்படுகிறோம்.

முக்கிய குறிப்புகள்

பார்க்கவகுலம் சமுதாயம் பற்றிய சில முக்கிய குறிப்புகள்

சாதி (அ) இனம் பார்க்கவகுலம்
மதம் இந்து
மொழி தமிழ்
வழிபாட்டு முறை குலதெய்வம், சைவம், வைணவம் மற்றும் இதர இந்து தெய்வங்களின் வழிபாடு.
சுட்டுபெயர்கள் உடையார், மூப்பனார், நயினார்
உணவு பழக்கவழக்கம் சைவம் மற்றும் அசைவ உணவுகள்

பாரத கண்டத்தில் இந்தியாவின் தென் பகுதியில் குறிப்பாக தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளில் பரவலாகவும் வேலை மற்றும் குடியேற்றம் காரணமாக வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் பார்க்கவகுலம் சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்த சமுதாயத்தில் பார்க்கவகுல ஆண்மக்களை பார்க்கவன் என்றும் பெண்மக்களை பார்க்கவி என்றும் குறிப்பிடுகின்றனர்.

கொள்கைகள்

இந்து சமயம் சனாதனதர்மம் கலாசார வாழ்வியல் முறையை கொண்ட ஒரு மக்கள் சமுதாயம்.

சாதி என்பது ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கம் உடைய சமூக மக்களின் குடி (அ) வம்சம் (அ) சந்ததியினரின் குடும்ப பெயர்.

சாதிகள் இருப்பதில் தவறில்லை. ஏற்றதாழ்வு ஒன்றே இருக்க கூடாத ஒன்று.

எல்லோருடனும் நட்பு பாராட்டி அனைத்து சமூக மக்களையும் மதிக்க வேண்டும்.

திறமை மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும்.

மதமாற்றத்தை தடுக்க வேண்டும்.

கோஷம்

உணர்வால் இணைவோம்!

உறவால் மகிழ்வோம்!

குலத்தை காப்போம்!

பாரத நாடு (அ) இந்திய நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு பார்க்கவகுல மக்களை கீழ்கண்டவாறு அரசு பதிவில் பதிவுசெய்து குறிக்கின்றனர்.

தொலைநோக்கு

Vision

பார்க்கவகுல இந்து மக்களின் முன்னேற்றத்திற்க்கான படிகளை உருவாக்கிடவும், பாதுகாத்திடவும், அவர்களை குலம்காத்து தலைநிமிர செய்வதே இலக்காக கொண்டு திட்டங்களை வகுத்து வருகிறது நமது சங்கம்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள்

சமுதாய ஒற்றுமை

திருமண தகவல்

கல்வி வழிகாட்டி

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

கலாசாரம் மற்றும் சமய கல்வி

சமுதாய பாதுகாப்பு

பள்ளிக்கூடம்

கல்லூரி

இலக்கு

Mission

பார்க்கவகுல இந்து மக்களின் கல்வி, பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நிலையான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது எங்கள் முக்கிய இலக்காகும்.

✓ கல்வி வழிகாட்டுதல்

மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்வழிகாட்டல் உதவி.

✓ வேலைவாய்ப்பு உதவி

வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான தகவல் மற்றும் ஆதரவு.

✓ சமூக ஒற்றுமை

அனைத்து பிரிவினரையும் இணைக்கும் ஒற்றுமை நிகழ்வுகள்.

✓ கலாச்சார பாதுகாப்பு

பாரம்பரியம், மரபு மற்றும் சனாதன தர்ம வாழ்வியலை பாதுகாத்தல்.

தமிழ்சங்கம்

Sangam Period

தமிழ் சங்கம் நடந்ததை அடிப்படையாக கொண்ட காலகட்டமே சங்ககாலமாகும். இது கி.மு 500 முதல் கி.பி 300 வரையான காலம் என்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு என்பது கிறிஸ்து பிறப்புக்கு முன் என்றும் கி.பி என்பது கிறிஸ்து பிறப்புக்கு பின் என்றும் குறிப்பிட்டதை வரலாற்று காரணங்களுக்காக தற்போது பெயர் மாற்றி வைத்துள்ளனர்.

மூன்று தமிழ்சங்கங்கள்

  • முதல்சங்கம்: கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்டது. முதல் சங்க காலம் 4440 ஆண்டுகள் நீடித்ததாக கூறப்படுகிறது.
  • இடைச்சங்கம்: தென்மதுரை அழிந்த பின் பாண்டிய மன்னன் கடுங்கோன் கபாடபுரத்தில் நிறுவிய சங்கமாகும்.
  • கடைச்சங்கம்: மதுரையில் நடைபெற்றது. 49 மன்னர்கள் ஆட்சி செய்ததாகவும் 449 புலவர்கள் பங்களித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் மையமாக கொண்டதே தமிழ்சங்கம்

History – Community

உடையார்

உடையார்

உடையார் என்ற பெயர் சாதிபெயராக அறியப்படுகிறது. இந்த பெயரானது உடையவர் அதாவது வைத்திருப்பவர் என்று பொருள்படும். அதாவது நிலம் உடையவர், செல்வம் உடையவர் வைத்திருப்பவர் என பொருள்படகூடிய உயர்வு சுட்டு பெயராகும்.

முற்காலத்தில் புலவர்களால், மக்களால், அறிஞர்களால் வழங்கப்பட்டு அழைக்கப்பட்ட பட்டம் (அ) சுட்டு பெயராகும். இவ்வாறாக பல பெயர்கள் பல்வேறு சமூக மக்களுக்கும் இருக்கின்றன.

உடையார் என்ற பட்டம் வேறு பல இன மொழி பேசும் மக்களிடம் காணப்பட்டாலும் பார்க்கவ குல சமுதாய சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களையும் பொதுவாக உடையார் என்று அழைப்பதுண்டு. சுருதிமான்கள் மூப்பனார் என்ற பட்டம் கொண்டும் இருக்கின்றனர். வேறு சில இன குழுக்களும் மூப்பனார் பட்டம் கொண்டுள்ளனர்.

உடையார் மூப்பனார் நயினார் பட்டம் கொண்ட பிற சமூகம்

  • மூப்பனார் என்ற பட்டம் பார்கவகுலத்தின் சுருதிமான், முத்தரையர், பள்ளர், கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற பல சாதியினரால் பயன்படுத்தப்படுவதாக செய்தி இருக்கிறது.
  • உடையார் என்ற பட்டம் பார்கவகுலத்தின் மலையமான், பார்கவ குலத்தின் நத்தமான், பார்கவ குலத்தின் சுருதிமான், குலாளர், முதலியார், பிள்ளைமார், அகமுடையார் போன்ற பல சாதியினரால் பயன்படுத்தப்படுவதாக செய்தி இருக்கிறது.

சாதியும் பட்டமும்

சாதி என்பது ஒரு குடியின் ஒத்த பழக்கவழக்கம் உடைய வாழ்வியல் உறவு முறைக்கு குறியிடப்பட்ட பெயர் ஆகும். இது பின்னாளில் சாதி என்ற சொல்லின் கீழ் மக்களால் அடையாளபடுத்தபட்டனர்.

பிறகுதான் மக்களுக்குள் இன வெறுப்பும், வேற்றுமையும் அதிகமாக உருவாகிற்று. இதற்க்கு காரணம் மக்களை ஆளவேண்டும், அடிமையாக்க வேண்டும், மற்றவர்களைவிட உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சுயநல ஏமாற்றுகாரர்களின் உத்தியே சாதி மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வு. அதன் விளைவாகவே சாதி பெரியதாக பேசப்பட்டு வருகிறது.

இதற்க்குமுன் மக்கள் அனைவரும் தனி தனி குடியின் கீழ் கூட்டமாகவும் குழுவாகவும் இனவெறுப்பின்றி இயற்கையோடு வாழ்வாதாரத்திற்க்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு குடியை சேர்ந்த மக்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு வகையான தொழில் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். அது சேவை, உற்பத்தி முதல் அரியணை வரை பல்வேறு வகைகளாக அடங்கும்.

மக்களாட்சி முறை காலத்தில் தொழில் அடிப்படையில் சாதிகளையும் அதன்மூலம் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கி மக்களை ஆட்சி செய்வதை காணமுடிகிறது. இவ்வாறாக தற்போதைய சாதிகள் பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கின்றது.

பட்டம் பொதுவாக சிறப்பு, கொடை, செயல், பிறப்பு, பக்தி, கல்வி, வீரம் போன்ற பல வீர தீர காரணங்களுக்காக வழக்கபட்டிருக்கிறது. இந்த பட்டங்கள் அணைத்து குடி மக்களுக்கும் அவர்களின் செயல்களை பொறுத்து பல்வேறு காலகட்டங்களில் வழங்கபட்டிருக்கிறது.

இந்த பட்டம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே என்றில்லாமல் வீர தீர செயல்களை பொறுத்து பலவகையாக இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பட்டமானது சாதி பெயராக உருவெடுத்திருக்க வேண்டும். இந்த பட்டங்கள் இப்போதும் வீர தீர செயலுக்காக கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

வரலாறு கற்றுகொடுக்கும் பாடம்

புராண காலங்களில் இருந்து தற்போதைய காலம் வரை நல்லவர்களை போல் கெடுஞ்செயல் செய்வோரும் வாழ்ந்துவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கெடும்செயல் செய்வோர் மற்றவர்களை அழிக்க முற்படுவது, செல்வங்களை அபகரிக்க முற்படுவது, பேரசை கொள்வது, கொடுமைகள் செய்வது, வரலாறுகளை அழிப்பது போன்ற பல கெடும்செயல்களை காலம்காலமாக தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மண், பொன், பெண் ஆசையினால் மக்களை கட்டுப்பாட்டில் அடிமையாக வைத்திருக்க பிரிவினை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுபடுத்தி வைத்திருகின்றனர். இதனாலேயே மக்களிடம் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் காணப்பட்டிருக்கிறது. இவற்றை அறிந்து தீயோரின் வஞ்சக வலையில் சிக்காமல் அனைவரையும் சமமாக பாவித்து சனாதனதர்மத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவருக்கும் வரலாறு கற்றுகொடுக்கும் பாடமாகும்.

ஒற்றுமை • சமத்துவம் • சனாதன தர்ம வாழ்வு

இந்து மதம்

Hindu Religion & Cosmic Time Structure

இந்து சமயம் (அ) மதம் தோற்றுவித்த காலம் மற்றும் தோற்றுவித்தவர் என எதுவும் இல்லை. இது ஆதி மதம் என்றும் ஒரு வாழ்வியல் முறையாகவும் கருதப்படுகிறது. சைவம், வைணவம் போன்ற பல பிரிவுகள் இதில் உள்ளன. சிவன், விஷ்ணு, பிரம்மா, இலட்சுமி, சரஸ்வதி, காளி, விநாயகர், முருகன், மதுரைவீரன், கருப்பசாமி, அய்யனார், அம்மன், பஞ்சபூதங்கள் உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடும் மரபு இந்து சமயத்தில் காணப்படுகிறது. வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்தும் சனாதன தர்மம் என்ற ஒரே வாழ்வியல் முறையையே பின்பற்றுகின்றன.

இந்து மத கால கணக்கீடு

1. கிருத யுகம்

(17,28,000 ஆண்டுகள்)

2. திரேதா யுகம்

(12,96,000 ஆண்டுகள்)

3. துவாபர யுகம்

(8,64,000 ஆண்டுகள்)

4. கலியுகம்

(4,32,000 ஆண்டுகள்)

[கலியுகம் 3102 BCE இல் தொடங்கியது]

இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் எனப்படுகிறது. 12 மகாயுகங்கள் சேர்த்து ஒரு மன்வந்தரம். 14 மன்வந்திரங்கள் சேர்த்து ஒரு கல்பம். இவ்வாறு 30 கல்பங்கள் உள்ளதாக இந்து சமயத்தில் கூறப்படுகிறது.

கல்பங்கள்

Hindu Cosmic Time Cycles

இந்து தத்துவம் பிரபஞ்சத்தின் கால சக்ரத்தை ত்రிशு கல்பங்களாக (Kalpas) பிரிக்கிறது. ஒவ்வொரு கல்பமும் ஒரு தனிப்பட்ட மாதிரி அல்லது சூத்திரம் (Sutras) ஐ பின்பற்றி வருகிறது.

1. வாமதேவ கல்பம்

2. சுவேத வராக கல்பம்

3. நீல லோகித கல்பம்

4. ரந்தர கல்பம்

5. ரெளரவ கல்பம்

6. தேவ கல்பம்

7. விரக கிருட்டிண கல்பம்

8. கந்தற்ப கல்பம்

9. சத்திய கல்பம்

10. ஈசான கல்பம்

11. தமம் கல்பம்

12. சாரசுவத கல்பம்

13. உதான கல்பம்

14. காருட கல்பம்

15. கெளரம கல்பம்

16. நரசிம்ம கல்பம்

17. சமான கல்பம்

18. ஆக்நேய கல்பம்

19. சோம கல்பம்

20. மானவ கல்பம்

21. தட்புருச கல்பம்

22. வைகுண்ட கல்பம்

23. லெச்சுமி கல்பம்

24. சாவித்ரி கல்பம்

25. கோர கல்பம்

26. வராக கல்பம்

27. வைராச கல்பம்

28. கௌரி கல்பம்

29. மகோத்வர கல்பம்

30. பிதிா் கல்பம்

தமிழ் நாட்காட்டி

Panchangam - Hindu Calendar System

பஞ்சாங்கம் (Panchangam)

இந்து சமயத்தின் நாட்காட்டி பஞ்சாங்கம் ஆகும். பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை கொண்ட ஒரு முறையாகும்:

✦ திதி (Tithi)

நாட்கள் - சந்திரன் பூமியை சுற்றும் பாதை

✦ வாரம் (Vara)

வாரங்கள் - நாட்களின் குழுக்கள்

✦ நக்ષத்ரம் (Nakshatra)

நட்சத்திரங்கள் - விண்மீன் நட்சத்திரங்கள்

✦ யோகம் (Yoga)

யோகம் - சூரியன் மற்றும் சந்திரனின் நிலைகள்

✦ கரணம் (Karana)

கரணம் - பொன் திதியின் பகுதி

தற்போது பயன்படுத்தும் நாட்காட்டியானது பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொது நாட்காட்டி. இது ஆண்டுகளை தெளிவாகவும் துல்லியமாகவும் கணக்கிடுகிறது.

இந்து மதத்தின் நிலை

Status of Hinduism

இந்து மதம் காலத்திற்கும் இன்றளவும் நிலைத்திருக்க காரணம் இந்து மக்களே. அதாவது இந்து மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்து வரும் வாழ்வியல்முறையே.

ஆனாலும் இந்து மதத்தையும் அந்த மக்களையும் அழிக்க பல தீயசக்திகளும் மதவெறியர்களும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

இந்து மதத்தை சீர்குலைக்கும் தீயசக்திகளின் செயல்பாடுகள்

இந்து மதம் பற்றிய தவறான கருத்துகளை பரப்புவது

பண உதவிகள் மற்றும் திருமணங்கள் வழியாக மதம் மாற்றுவது

இந்து மத பழக்கவழக்கம் மற்றும் வாழ்வியல்முறையை கேளிசெய்வது மற்றும் இகழ்வது

இந்து மத மக்களின் உரிமையை தடுப்பது

வரலாற்று ஆவணங்களை அழிப்பது மற்றும் மாற்றுவது

வேற்று கலாச்சார உட்புகுத்தல்

இந்து மதத்தை பாதுகாப்பது ஒவ்வொரு இந்து மக்களின் இறையான் பொறுப்பாகும்!

நிகழ்வுகள்

Community Events & Activities

ஆண்டுவிழா

வருடாந்திர சங்கக் கூட்டம் மற்றும் சமூக ஒற்றுமை விழா.

📅 தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

கல்வி வழிகாட்டி முகாம்

மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்.

📅 தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

சமுதாய ஒற்றுமை சந்திப்பு

சமூக மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் பிரச்சினை தீர்வு.

📅 தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

திருமண தகவல் மையம்

சமுதாய உறுப்பினர்களுக்கான திருமண தகவல் பரிமாற்றம்.

📅 தொடர்ந்து நடைபெறும்

கலாச்சார நிகழ்ச்சி

பாரம்பரிய கலை, இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்.

📅 விரைவில் அறிவிக்கப்படும்

சமூக சேவை

ரத்த தானம், உதவி முகாம் மற்றும் சமூக நலப்பணிகள்.

📅 தொடர்ந்து நடைபெறும்

கல்வி பிரிவு

Education-Wing – Student Registration Form

மாணவர்கள் கல்வி உதவி, வழிகாட்டுதல் மற்றும் உதவித்தொகை தொடர்பான விவரங்களை பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Evolution

புவியியல் ஒரு பார்வை

உலகம் தோன்றியது தோராயமாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்று அறிவியல் கூறுகிறது. ஒவ்வொரு சமயத்தினருக்கும் உலகம் எப்படி எப்போது உருவானது என்பதை ஒரு கதையாக தனது மக்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி வருகின்றனர். அவ்வாறாக உலகம் தோன்றியது பற்றி ஒவ்வொரு சமயமும் ஒரு கருத்து சொல்வதை காணமுடிகிறது. இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது.

பூகோள அமைப்பு

உலகம் தோன்றியதிலிருந்து பல உயிர்களையும் இயற்கை பேரழிவுகளையும் சந்தித்து கடந்து வருகிறது. இதில் பல உயிரின மாற்றங்கள், பூகோள மாற்றங்கள் நடந்திருப்பதாகவும் நடப்பதையும் நம்மால் அறிய முடிகிறது. இங்கு உயிரினங்கள் அழிந்தும், புதிய உயிரினங்கள் தோன்றியும், மலைகளும் கடல்களும் உருமாறியும், நகரங்கள் அழிந்திருப்பதையும் நாம் அறிகிறோம். பார்க்கவும் கூட செய்கிறோம். இவ்வாறாக பூகோளஅமைப்பு பல மாறுதல்களுக்கு உட்பட்டு இருக்கிறது.

மனிதன் கடந்து வந்த பரிணாம பாதை

  • பழைய கற்காலத்திற்கு முந்தைய காலம் தெரியவில்லை.
  • பழைய கற்காலம்
  • புதிய கற்காலம்
  • செம்பு காலம்
  • வெண்கலகாலம்
  • இரும்பு காலம்
  • சங்க காலத்திற்க்கு முந்தைய காலம்
  • சங்க காலம்
  • சங்கம் மருவிய காலம்
  • வரலாற்று காலம்
  • நவீன காலம்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலம் குறித்து உறுதியான வரலாற்று ஆதாரம் இல்லை. ஆனாலும் திருவள்ளுவர் கலியுகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம். திருவள்ளுவரின் காலம் குறித்த கருத்துக்கள் தமிழறிஞர்களின் கூற்றுப்படி திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்றும் இதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடுகிறார்கள்.

சில ஆய்வாளர்கள், திருவள்ளுவரை சங்க இலக்கியக் காலத்தவராகவும் கி.மு 3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 1-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர். சில மதிப்பீடுகள், திருவள்ளுவர் கி.பி 5-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் தெரிவிக்கின்றன. திருவள்ளுவரின் பிறப்பு, இறப்பு குறித்து அதிகாரபூர்வமான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததே இந்தக் கால வேறுபாட்டிற்குக் காரணம்.

மொத்தத்தில், திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்பதும், அவரது காலம் குறித்த உறுதியான காலக்கோடு இல்லை என்பதும் முக்கியமானது.

தொடர்புக்கு

Get in Touch with Parkavakulam – Kovai

📍 முகவரி

பார்க்கவகுலம் சங்கம்,
கோவை, தமிழ்நாடு,
இந்தியா.

📞 தொலைபேசி

+91 XXXXX XXXXX

📧 மின்னஞ்சல்

info@parkavakulamkovai.com

🕒 நேரம்

திங்கள் – சனி : காலை 9.00 – மாலை 6.00